ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையுடன் வந்த இளைஞர் : திக்குமுக்காடிய பொலிஸ்!!

1258

Blood stains

பெங்களூரில் கொடுத்த கடனை நண்பன் திரும்பி கொடுக்காத காரணத்தால் அவனது தலையை துண்டித்து, பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் வசித்து வந்த சசிகுமார்(24) என்பவர், தனது நண்பன் மஞ்சுநாத்(23) என்பவருக்கு ரூ.25 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.

பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், மஞ்சுநாத் கடனை திருப்பி அளிக்கவில்லை. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கூறி நாட்களை கழித்து வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட சசிகுமார், எனது பணத்தை திருப்பி தராவிட்டால் நடப்பதே வேறு என மஞ்சுகுமாரை மிரட்டியுள்ளார். ஆனாலும் மஞ்சுகுமார் பணத்தை திருப்பி தந்தபாடில்லை.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மஞ்சுகுமாரை சந்திக்க சென்ற சசிகுமார், அங்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறவே, கோபம் கொண்ட சசிகுமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுகுமாரின் வயிற்றில் கீறியுள்ளார்.

இதில் நிலைகுலைந்தது கீழே விழுந்த மஞ்சுகுமாரின் தலையை துண்டித்த சசி, அதனை தனது பைக்கின் பின்புறத்தில் உள்ள பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு, நேராக அங்கிருந்த காவல்நிலையம் சென்றுள்ளார்.ரத்த சொட்ட சொட்ட துண்டித்து தலையுடன் வந்த அந்த வாலிபரை பார்த்த பொலிசார் அதிர்ச்சியில் திக்குமுக்காடி போயினர்.இதனைத்தொடர்ந்த அந்த வாலிபரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வாங்கிகொண்ட பொலிசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.