வவுனியா ஓமந்தை பகுதியில் காணி ஒன்றிலிருந்து சற்றுமுன் எல்.ஏம்.ஜி ரக ஆயுதங்கள் 30 பொலிசாரால மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று(25.08.2016) காலை தனது காணியினை துப்பரவு செய்து கொண்டிருக்கும்போது இவ் ஆயுதங்களை கண்டுள்ளதாகவும் உடனடியாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிசார் 30 எல்.எம்.ஜி ரக ஆயுதங்கள் மற்றும் எறிகணை ஒன்றையும் மீட்டுள்ளதாகவும், சமன்குமார தலைமையில் சென்ற குழுவினரே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
தற்போது அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இக்காணியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்தினையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மீட்புப் பணிகளை ஆரம்பிக்கப்படடுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.














