உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு : விலை அதிகரிக்குமா?

585

potatoes

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த 35 ரூபா வரி, நேற்று (24) நள்ளிரவு முதல் 40 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.