ஹட்டன் பொகவந்தலாவ வீதியில் இன்று இடம்பெற்ற கொடூர விபத்தில் சாரதி பலி!!

566

Accident

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (27) சனிகிழமை நண்பகல் 12.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் முகம் சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லதன்னி பகுதியில் இருந்து ஹட்டனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டனில் நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிறிவிக்கபடுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ராஜேந்திரன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சடலம் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடா்பில் கெப் வாகன சாரதி கைது செய்யபட்டுள்ளார்.
இதேவேளை இதன்காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ வீதியில் சுமார் 45 நிமிட நேரம் வாகன நெரிசல் காணப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

1