இருவேறு விபத்துக்களில் இரண்டு உயிரழப்புக்கள்!!

624

Acci

வெயாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெயாங்கொடை – கட்டுநாயக்க வீதியில் ஒரே திசையில் சென்ற லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெயாங்கொடை, மகலெகொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர, மில்லெனிய, தெல்கட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கோனுதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பரகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.