வவுனியாவிலிருந்து நல்லைக்கந்தன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரை!(படங்கள்)

653

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 3வது வருடமாக வேல் தாங்கிய நடைபாரயாத்திரை இன்று ஆரம்பமாகியது.

முன்னதாக வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் இடம்பெற்று கந்தனுடைய வேல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளச் செய்து அறநெறிச் செல்வி சாமி அம்மா தலைமையில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் அமைதி வேண்டியும் சாந்தி சமாதானம் வேண்டியும் இன்று ஆரம்பமாகிய இந்த நடைபாதயாத்திரை ஏ9 வீதிவழியாகச் சென்று அவ் வீதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்து எதிர்வரும் நான்காம் திகதி நல்லூர் ஆலயத்தில் இடமபெறும் தேர்திருவிழாவுடன் இணையும்.

ஆரம்ப நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் எஸ்.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன், தமிழ் சங்க தலைவர் தமிழருவி சிவகுமாரன் உள்ளிட்ட பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

vavuniya1

vavuniya2

vavuniya3

 

1 2 3 4 5