பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 251 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. சர்ப்ராஸ் அஹ்மட் 130 பந்துகளில் 105 ஓட்டங்களைக் குவித்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.
ஜோ ரூட் 108 பந்துகளில் 89 ஓட்டங்களையும் ஒய்ன் மோர்கன் 80 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 30 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 2:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.






