மங்கள நிகழ்வுகள் நடைபெற்ற 3 வீடுகள் உட்பட ஐந்து வீடுகளில் கொள்ளை!!

752

Kollai

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் ஐந்து வீடுகள் நேற்று நள்ளிரவு இனந் தெரியாதேரால் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீடுகளிலிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன இவ்வாறு கொள்ளையர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற வீடுகள் இரண்டில் திருமண வைபவமும், ஒன்றில் பூப்பனித நீராட்டு விழாவும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் குறித்த வீடுகளுக்கு அருகிலுள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டு இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கத்தி, குடை மற்றும் பாதனிகளை கொள்ளையர்கள் விட்டுசென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.