இயக்கச்சியில் வாகன விபத்து!!

1149

Accident

இயக்கச்சி பகுதியில் இன்று காலை கயஸ் வாகனம் ஒன்று விபத்துகுள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் வாகனம் இயக்கச்சி பகுதியில் வீதியின் மறுபக்கத்தில் இருந்த மரத்துடன் மோதியே விபத்துக்குள்ளானதாக பளைப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து சாரதி தூக்கத்தில் இருந்ததால் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இவ்விபத்தில் காயமடைந்த குறித்த வாகன சாரதி கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அத்துடன் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளையும் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.