இரண்டே நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கலாம் : தயாராகின்றது விண்வெளி ரயில்!!

338

Train

தற்போது விஞ்ஞானிகளின் மனதில் மட்டுமல்ல பல மக்களின் பார்வையும் செவ்வாய் கிரகத்தின்மேல் காணப்படுகின்றது.

இதற்கு காரணம், சம கால விண்வெளி ஆய்வுகள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி அதிகளவில் இடம்பெறுவதுடன், மக்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளமை ஆகும்.

எனினும் இவை தொடர்பான முடிவுகள் இன்னும் எட்டப்படாத நிலையில் தற்போது மற்றுமொரு பரபரப்பு தொற்றியுள்ளது.

அதாவது தற்போதைய நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வதற்கு தோராயமாக 260 நாட்கள் வரை செல்லும்.

ஆனால், இரண்டே நாட்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய விண்வெளி ரயில் ஒன்றின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மென்ரீரியலில் வசிக்கும் Charles Bombardier எனும் கண்டுபிடிப்பாளர் உருவாக்கியுள்ளார்.

இந்த ரயில் ஆனது ஒளியின் வேகத்திலும் 1 சதவீத வேகத்தில் பயணிக்கக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார். அதாவது செக்கனுக்கு 3,000 கிலோ மீற்றர்கள் தூரம் பயணம் செய்யும்.

குறித்த மாதிரி ரயில் ஆனது 6 உருளை வடிவ கொள்கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், நிஜத்தில் இதன் மொத்த நீளம் 50 மீற்றர்கள் வரை இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலின் உதவியுடன் சந்திரனுக்கு 2.13 நிமிடத்திலும், நெப்டியூனுக்கு 18 நாட்களிலும் பூமியிலிருந்து பயணிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.