மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை.
மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளே உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் சிகிச்சை அளித்து பலருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.