இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு BMW கார்களை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!!

549

S1

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பிர­கா­சித்த இந்­திய வீராங்­க­னை­க­ளான பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்­மாகர் ஆகி­யோ­ருக்கு இந்­திய கிரிக்கெட் நட்­ச­த்தி­ர­மான சச்சின் டெண்­டுல்கர் BMW கார்­களை பரி­சாக வழங்­கினார்.

ரியோ ஒலிம்பிக் போட்­டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பட்­மிண்டன் வீராங்­கனை பி.வி.சிந்து, மல்­யுத்தப் போட்­டியில் வெண்­கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் ஜிம்­னாஸ்டிக் போட்டியில் வெண்­கலப் பதக்க வாய்ப்பை இழந்த தீபா கர்­மாகர் ஆகி­யோ­ருக்கு ஐத­ராபாத் நகரில் நேற்­று­முன்­தினம் மிகப்­பெ­ரிய பாராட்டு விழா நடை­பெற்­றது.

இந்த விழாவில் மேற்­படி மூன்று வீராங்­க­னை­களும் BMW ஆடம்­பர கார்­களை சச்சின் டெண்­டுல்கர் பரிசளித்தார்.

பேட்­மிண்டன் வீராங்­கனை பி.வி.சிந்­துவின் பயிற்­றுநர் கோபி­சந்தும் இவ்­வி­ழாவில் கௌரவிக்கப்பட்டார். சச்சின் டெண்­டுல்­கரின் மனைவி அஞ்­சலி டெண்­டுல்­கரும் இந்­நி­கழ்வில் பங்கு­பற்­றினார்.

மேற்­படி 3 வீராங்­க­னை­க­ளுக்கும் BMW ஆடம்­பர கார்­களை பரி­ச­ளித்த சச்சின் டெண்­டுல்கர், இந்நிகழ்வில் உரை­யாற்­று­கையில், ‘உங்­களால் இந்த நாடு பெரு­மை­ய­டை­கி­றது.

ஒலிம்பிக் போட்­டி­களில் சாதிக்க வேண்டும் என்­பதில் நீங்கள் எவ்­வ­ளவு துடியாய் இருந்­தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அடுத்த ஒலிம்பிக் போட்­டி­களில் தங்கம் வெல்­வ­தற்­கான தயாரிப்புகளை மேற்­கொள்ள இதுவே சரி­யான தருணம்.

நீங்கள் இந்த நாட்­டுக்கு அளிக்­க­வி­ருக்கும் ஆச்­ச­ரி­ய­க­ர­மான தரு­ணங்­க­ளுக்­காக நாங்கள் உங்களுடன் இருக்­கிறோம். வென்­று­கொண்­டே­யி­ருங்கள்’ என்றார்.

அதே­வேளை பட்­மிண்டன் பயிற்­றுநர் கோபிச்­சந்­திடம் ‘எப்­போதும் சாம்­பி­யன்­களை உருவாக்குவதில் உங்கள் பணி அபூர்­வ­மா­னது. பயிற்­சி­யா­ள­ராக அபா­ர­மான குண­ந­லன்­களைக் கொண்­டி­ருக்­கி­றீர்கள். நீங்கள் அனை­வ­ருக்கும் ரோல் மொடல்’ என சச்சின் கூறினார்.

இந்­நி­கழ்வில் பட்­மிண்டன் வீராங்­கனை பி.வி. சிந்து பேசு­கையில், கடந்த தடவை சச்சின் தனக்கு கார் பரி­ச­ளித்த போது, ஒலிம்பிக் பதக்கம் வென்றால் இன்­னொரு கார் பரி­ச­ளிப்­ப­தாகக் கூறி­யதை நினைவு கூர்ந்தார்.

எனது கனவு நிஜமானது, அனைவருக்கும் நன்றி, கோபிசந்துக்கும் மிக்க நன்றி என்றார். சாக்‌ஷி மாலிக், திபா கர்மாகர் ஆகியோரும் சச்சினுக்கு நன்றி தெரிவித்தனர்.

S2