ரயில் தண்டவாளத்தில் படுத்த பெண்! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்!!

611

train

ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தில் படுத்து கிடந்த பெண் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை அருகே இரு நாட்களுக்கு முன் எல்.சி ரயில்வே கேட் 26ல் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.

தண்டவாளத்தை ஒட்டி வசிப்போர் அவரை பார்த்து விட்டு முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து விரட்டி விட்டனர். ஆனாலும் சற்று நேரத்தில் மீண்டும் அங்கு வந்த பெண் மாலை 3 மணிக்கு தாம்பரம் மார்க்கமான தண்டவாளத்தில் நின்றிருந்தார்.

அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை பார்த்தும் அந்த பெண் தண்டவாளத்திலேயே நின்றிருந்தார்.

ரயில் அருகே வந்ததும் திடீரென தண்டவாளத்தில் படுத்தார் அருகில் இருந்தவர்கள் குறித்த பெண்ணின் நடவடிக்கையை பார்த்து அலறினர்.

பின் ரயில் அந்த இடத்தை கடந்து சென்றதும் தண்டவாளத்தில் படுத்திருந்த பெண் எவ்வித காயமும் இன்றி எழுந்து எதுவும் நடக்காதது போல் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த கேட் கீப்பர் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் அந்த பெண் யார் என்பது தெரியவில்லை தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் நின்றிருக்கலம்.

ரயில் அருகே வந்ததும் மனம் மாறி தண்டவாளத்தில் படுத்துவிட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று தெரிவித்துள்ளனர்.