ஐந்தரை கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் காங்கேசன்துறை கடற்படை முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நேற்று இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மாதகல் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.






