மனைவியை துப்பாக்கியால் சுட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில்!!

513

Jail

தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட லுத்தினல் கேர்ணல் பிரதீப் குமார கேத்தசிங்க (49) எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கடுவளை நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கி மற்றும் அவர் வசம் இருந்த வாகனமும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.