அமெரிக்கா தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு வெளியேறியது ஐ.நா. குழு!!

335

us-war

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது.

இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஐ.நா குழு முகாமிட்டு ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவும் அமெரிக்கா முடிவு செய்திருந்தது. தற்போது ஐ.நா ஆய்வுக் குழு சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதால் அமெரிக்கா தாக்குதல் நடத்த ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.