நடுவானில் விமானங்கள் மோதி பயங்கர விபத்து!!

535

Flight

அமெரிக்காவில் இரண்டு குட்டி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெத்தேலுக்கு வடக்கே 60 மைல்கள் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் அலாஸ்கா மாநிலத்தில் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

விபத்து பற்றித் தகவல் அறிந்ததும், மருத்துவர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், ஒருவரும் உயிர்பிழைக்கவில்லை, இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த 5 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை நடத்துவதற்காக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சார்பில் மூன்று அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு வல்லுநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தரப்பிலும் விசாரணை நடத்தப்படுவதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.