மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்க்கு 41 ஆண்டு சிறை!!

681

jail

பெற்ற மகள்களை பாலியலில் ஈடுபடுத்திய புதுவை தயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயஸ்ரீ சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயஸ்ரீக்கு உதவிய புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் தான் பெற்ற மகள்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய ஜெயஸ்ரீ இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டு கால சிறை தண்டனையை 2 முறை அனுபவிக்க வேண்டும்.

மேலும் விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டு சிறை தண்டனையை 3 முறை அனுபவிக்க வேண்டும். மொத்தமுள்ள 41 ஆண்டுகால சிறை தண்டனையையும் 10 ஆண்டுக்குள் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும், புரோக்கர்களாக செயல்பட்ட ஆனந்த், கர்ணன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.