பம்பலப்பிட்டி வர்த்தகர் படுகொலை : முக்கிய தகவல்கள் அம்பலம்!!

624

Sulaiman

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலையுடன் பலர் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகத்திற்குரியவர்கள் இன்னும் சில தினங்களில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சி.சி.டி.வி காணொளிகளின் காட்சிகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி இரவு அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து கடத்தப்பட்டார்.

இந்நிலையில், மாவனெல்ல, ஹெம்மாதகம பிரதேசத்தில் இருந்து கடந்த 24ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.