வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் உயர் குருதி அழுத்தம் காரணமாக உயிரிழப்பு!!

830

Dead

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியங்குளம் சமுர்த்தி அலுவலகத்தில் பணியாற்றிய பட்டாணிச்சூர் பகுதியில் வசித்து வந்த ஹபீல் முஹம்மது இர்சாத் 38 என்ற வயதுடைய குடும்பஸ்தர் நேற்று வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இவர் நேற்றைய தினம் காலை தனது கடமைக்கு சென்றுள்ளார் சிறிது நெரத்தின் பின்னர் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு வியர்வை அதிகமாக வருவதாகவும் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலைக்குச செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

புளியங்குளம் வைத்தியசாலைக்குச் சென்றபோது வவுனியா பொது வைத்தியசாலைக்கு காவு வண்டியில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் தொடர்பு கொண்டு உறவினருக்கு வவுனியா பொது வைத்தியசாலைக்கு தனது கிளினிக் பதிவுப் புத்தகத்தினை எடுத்தவருமாறு தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் 14ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையினை மேற்கொண்ட நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர், இவர் இருதய வருத்தம் காரணமாக கிளினிக் சென்று வந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இளற்கை மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவித்து சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.