பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி!!

283

Philippine police investigators check bodies at a blast site at a night market that has left at least several people dead and wounded others in southern Davao city, Philippines late Friday Sept. 2, 2016. The powerful explosion at a night market late Friday in Philippine President Rodrigo Duterte's hometown in the southern Philippines took place amid a security alert due to a major offensive against Abu Sayyaf militants in the region, officials said. (AP Photo/Manman Dejeto)

பிலிப்பைன்ஸின் தெற்கு டவாஓ நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட டவாஓ நகர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte இன் சொந்த ஊர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிக்கும் தன்மை கொண்ட மோட்டார் சாதனமொன்றின் பாகமொன்றை விசாரணைக்குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து தலைநகர் மணிலா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு ஜனாதிபதி டவாஓ நகரிற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் வழமையாக செல்லும் மார்க்கோ போலோ ஹோட்டலுக்கு வெளியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.