வவுனியா தமிழ் மாமன்றம் நாடாத்தும் தமிழ் மாருதம் 2016 முதலாம் நாள் நிகழ்வு இன்று (03.09.2016) மாலை 4.00 மணியளவில் வவுனியா பொது நூலக சரஸ்வதி சிலைக்கு முன்பாக தமிழர் பாரம்பரிய நடன வாத்தியத்துடன் ஊர்வலமாக ஆரம்பமாகி வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தினை அதிதிகள் வந்தடைந்தனர்.
இந் நிகழ்வின் மங்கள விளக்கினை அருணா செல்லத்துரை தம்பதிகள் ஏற்றி வைத்தனர். வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைச் சேர்ந்த மாணவி தர்மிதா சசிக்குமார் தமிழ் வாழ்த்தினை பாடினார். அத்துடன் தலைமையுரையினை சி.கிருபானந்தகுமாரன் ( தமிழ் மாமன்ற தலைவர்) நிகழ்த்தினார்.
வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திரா, அருணா செல்லத்துரை தம்பதிகள் (மூத்த ஊடகவியலாளர்), த.மங்களேஸ்வரன் (வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம்), அரசியல் பிரமுகர்கள், அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றய நிகழ்வில் இசை அரங்கு, இசையும் அசையும், வழக்காடு மன்றம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் புத்தக மலிவுவிலைக் கண்காட்சி , ஒவியக் கண்காட்சி என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை காலை மற்றும் மாலை நேர நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















































