காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ள நிலையில், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ரயிலின் இரு பெட்டிகளை அகற்றியுள்ள நிலையில், ரயில் எஞ்சினை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயில் ஒன்றே நேற்றையதினம் இவ்வாறு தடம்புரண்டது.
எதுஎவ்வாறு இருப்பினும் இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், காங்கேசன்துறை வரையான ரயில் போக்குவரத்துக்கள் சாதாரணமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.








