உலகின் மிகவும் காரமான உணவை சாப்பிட்டவருக்கு காது கேட்கும் திறன் பறிபோன சோகம்!!

655

Noodles

உலகின் மிக காரமான உணவான mampus என்ற உணவை சாப்பிட்ட இந்தோனேசிய நபரொருவர் சில நிமிடங்கள் செவி கேட்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தோனேசியாவில் பென் சுமாடிவிரியா என்பவர் உலகின் மிக காரமான உணவான mampus என்ற உணவை ருசி பார்த்துள்ளார்.

Mampus அல்லது death noodles எனப்படும் இந்த உணவு தற்போது உலக அளவில் மிகவும் காரமான உணவாக கருதப்படுகிறது.

இந்தோனேசியாவின் ஜக்கார்த்தாவில் மட்டும் கிடைக்கும் இந்த கார உணவு Birds eye மிளகாய் எனப்படும் கார வகை மிளகாயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த உணவை பென் சுமாடிவிரியா சுவைக்கும் முன்னதாக தனது மேல்சட்டையை கழற்றியுள்ளார். பின்னர் ஒரு சில கவளங்கள் எடுத்து சுவைத்த அவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வியர்வை கொட்டியதாகவும், கண்கள் இருளடைந்து மயக்க நிலையில் சில நிமிடங்கள் இருந்ததாகவும் பின்னர் தெரிவித்துள்ளார்.

சில கவளங்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர் வாய் நிறைய ஐஸ் கட்டிகளை அள்ளிப்போட்டுள்ளார். பின்னர் குளிர்ந்த நீரை கோப்பை கணக்கில் குடித்துள்ளார். ஆனால் இவை ஒன்றும் அந்த கார உணவு தந்த தாக்கத்தை குறைக்கவில்லை என்று கூறிய பென், உடனடியா தண்ணீர் குழாயின் அடியில் தனது தலையை வைத்துக்கொண்டு தன்னால் எதையும் கேட்க முடியவில்லை என அலறியுள்ளார்.

பல மணி நேரங்கள் இதனால் அவஸ்தைக்குள்ளான அவர் இதுவரை உலகின் பல்வேறு வகையான கார உணவு வகைகளை சுவைத்துள்ளதாகவும், ஆனால் இதுபோன்ற கார உணவை வாழ்க்கையில் சுவைத்ததே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.