வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இராஜகோபுர மகா கும்பாபிசேக அறிவித்தல்!!(காணொளி)

821

ஈழவள  மநாட்டில் வடபால் நிகழும் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில் திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கு   நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் இருபத்து மூன்றாம் நாள் (08.09.2016) வியாழகிழமை காலை 6.50 முதல் 8.40 மணிவரையுள்ள கன்னி லக்கினமும் அனுஷ நட்சத்திரமும்  பூர்வபட்ச சப்தமியும் சித்தயோகமும் கூடிய சுப புண்ணிய வேளையில் விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும் நடைபெரும் வகையில் விநாயகபெருமான் திருவருள்பாலித்துள்ளார்.

 

எனவே அடியார்கள் அனைவரும் இறை சிந்தனையுடன் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து பேரருள்பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.

 

கும்பாபிசேக  நிகழ்வுகள் யாவும் ஓம் TV ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்!

NOTICE NOTICE1 NOTICE3 NOTICE4 NOTICE5