தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் அவரது 97 ஆவது வயதில் நேற்று (05) காலமானார்.
1947 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடப்பட்டது.
லிண்ட்சே தன்னுடைய காலத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
1947 ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் டக்கேட் அறிமுகமானார், முதல் இன்னிங்சில் 37 ஓவர்கள் வீசி 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தன்னுடைய மொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 19 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார், அதில் இரண்டு முறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.






