14 வயதான தனது காதலியை நண்பரொருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வல்லுறவுக்குட்பட்ட மாணவி மொனராகலை நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயில்வதாகவும் சந்தேக நபரான மாணவன் 10 ஆம் ஆண்டில் கல்வி பயில்வதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதிர்காமம் சென்றபோது இருவரும் அறிமுகமானதாகவும் மாணவியை மெதகமயிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து இருவரும் கணவன் – மனைவியாக நடந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.






