குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.
குறித்த பெண் மாத்திரமின்றி அவருடன் இருந்த மற்றுமொரு நபரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் மீது எதற்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் தனது காதலனுடன் குருணாகல் பகுதியில் வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது வீதியில் இருந்த யாசகர் ஒருவர் தனக்கு பண உதவி செய்யுமாறு குறித்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண் யாசக கேட்ட நபர் மீது எச்சில் துப்பி தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனை அவதானித்த சில இளைஞர்களே இவ்வாறு யுவதியின் மீதும் அவருடைய காதலன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நடுவீதியில் பெண்ணொருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டமைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிவந்தவாறு உள்ளன.