25 அடி குழியில் வீழ்ந்த கடற்படை வீரரின் பின்பகுதியை துளைத்துச் சென்ற கொங்கிரீட் கம்பிகள்!!

663

steel

கடற்­படை வீரர் ஒரு­வரின் பின்­பு­றத்தின் இரு இடங்­களில் (பிருஸ்ட பகுதி) துளை­யிட்­டி­ருந்த கொங்­கிறீட் கம்­பிகள் இரண்­டினை ஹம்­பாந்­தோட்டை பொது வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­யர்கள் வெற்­றி­க­ர­மாக அறுவை சிகிச்­சை யின் மூலம் அகற்­றி­யுள்­ளனர்.

நேற்று முன்­தினம் இரவு கதிர்­காமம் நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த பஸ்­ஸொன்றில் இருந்து இறங்­கிய குறித்த 34 வய­தான கடற்­படை வீரர் வீதியில் வெட்­டப்­பட்­டி­ருந்த 25 அடி ஆழ­மான குழியொன்றில் தவ­று­த­லாக வீழ்­தி­ருந்த நிலையில் கொங்­கிறீட் இடு­வ­தற்­காக பொருத்தப்பட்டிருந்த கொங்­கிறீட் கம்­பிகள் இரண்டு அவ­ரது தொடைப் பகு­தி­யினை துளைத்திருந்தன.

இத­னை­ய­டுத்து குறித்த கொங்­கிறீட் கம்­பி­யுடன், காய­ம­டைந்த கடற்­படை வீரர் திஸ்­ஸ­ம­ஹா­ராம வைத்­தி­ய­சா­லைக்கும் பின்னர் அங்­கி­ருந்து ஹம்­பாந்­தோட்டை வைத்­தி­ய­சா­லைக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

அங்கு பல மணித்­தி­யா­லங்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட அறுவை சிகிச்­சையின் மூலம் அக்கம்பிகள் அகற்றப்பட்டிருந்தாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.