கொடுமைப்படுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி சமைத்த பெண்!!

466

Cooking Lamb in slow cooker

சீனாவில் தன்னை கொடுமைப்படுத்திய கணவரை ஒரு பெண் கொன்று சமைத்துள்ளார்.

சீனாவில் உள்ள ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரு நபரை 2வது திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களே அவர் அப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

பின்னர், அப்பெண்ணையும் மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். அதை தாங்க முடியாத அப்பெண் தனது 2வது கணவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்தார்.



அதைத்தொடர்ந்து 3 நாட்களாக அறையில் அடைத்து வைத்து சாப்பாடு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டார். மேலும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

அதை தாங்க முடியாத பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். எனவே, அவரது சடலத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் போட்டு சமைத்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து சென்று அப்பெண்ணை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.