வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி : வீடும் சேதம்!!

1025

thunder

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேனப்புலவு கிராமத்தில் நேற்று (31) இரவு மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை வவுனியாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் தமது வீட்டில் இருந்தவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக இருவர் படு காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை வவுனியா நெளுக்குளம் பகுதியியல் தம்பனைக்குளம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அவ் வீட்டில் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது.