இன்றுமுதல் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களுக்கு அருகாமையில் ஏற்படும் தகவல்களை அல்லது பொலிஸாரிடம் தமிழில் முறைப்பாடு செய்யவேண்டுமானால் கீழுள்ள இலக்கத்திற்கு அழையுங்கள்.
வவுனியா- 0766224949
மன்னார்-0766226363
நேற்று இரவு 09.30 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ்மாஅதிபர் காரியாலயத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக இலங்கையின் பொலிஸ்மா அதிபர் கௌரவ பூஜித ஜெயசுந்தர கலந்து கொண்டு இந்நிழ்வை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி அரச அதிபர் திரு.திரேஷ்குமார், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் உட்பட வவுனியாவின் பிரபல வர்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திரு.செந்தில் ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்கள், பிரபல வர்த்தகர்கள், பிரஜைகள் குழுவினர் என பலரும் சமூகமளித்திருந்தனர்.


















