தமிழ் பெண்ணின் செயலால் மனமுருகிய ஒபாமாவின் மனைவி!!

265

obama

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து வருடம் தவறாமல் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை வாசித்து கொண்டிருக்கையில், சென்னை வாசியாக இருந்து பின்னர் அமெரிக்காவில் குடிபெயர்ந்த ஒரு தமிழ் தம்பதியரின் மகளான மாயா ஈஸ்வரன் (17) தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார்.

அந்த கவிதை ஒபாமா மனைவி மிச்சேல் மற்றும் அந்த சபையில் கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது.

அந்த கவிதையானது, என் இத்தனை வருட வாழ்வில் நான் இழந்ததை விட, முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன்.

என் தலை முடி உதிர்வதை போல, என் இனத்தின் அடையாளமான என் தமிழை உதிர்த்து இழந்து கொண்டிருக்கிறேன்.

என் தாய்மொழியை நான் பேசியே மூன்றாண்டுகள் ஆகிறது. என் தலைமுடி முழுதும் உதிர்வதை போல், என் தமிழை நான் முழுவதும் மறந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.

இதை அவர் வாசித்து முடிப்பதற்குள் அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசத்தில், உற்சாகத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

நீ கவிதையை இயற்றிய விதமும், அதை வெளிப்படுத்திய தன்மையும் சிறப்பாக இருந்தது என மிச்சேல் அவர்கள் மாயாவை மனம் மகிழ பாராட்டினார்.