உலகின் மிக உயரமான பாலம் : சாதனை படைக்கவிருக்கும் சீனா!!

435

bridge

உலகின் மிக உயரமான பாலத்தின் கட்டுமான பணிகளை சீனா முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் சமீப காலமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் கண்ணாடிகளால் ஆன பாலம் முதல் பல்வேறு வேறுபட்ட திட்டங்களை செயல்படுத்தி அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது உலகின் மிக உயரமான பாலம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர். இந்த பாலமானது சீனாவின் யூனன் மாகாணத்திற்கும் கியூஷு மாகாணத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவிருக்கும் இந்த பாலமானது Nizhu ஆற்றின் மீது சுமார் 565 மீற்றர்கள் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுமானத்தில் இருந்த இந்த பாலமானது சுமார் 1000 பொறியாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Beipanjiang என்றழைக்கப்படும் இந்த புதிய பாலமானது இதுவரை உலகின் மிகவும் உயரமான பாலம் என அறியப்பட்டுவந்த சீனாவின் Sidu ஆற்றுப் பாலத்தை முறியடித்துள்ளது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான கண்ணாடியாலான பாலமும் சீனாவில் தான் அமைந்துள்ளது.

இந்த பாலத்தினை காண பொதுமக்களின் வருகை பெருமளவு உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி தற்போது கண்ணாடி பாலத்தினை மூடி வைத்துள்ளனர்.