உலக மக்களை பதைபதைக்க வைத்த புகைப்படம் : சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக் நிறுவனம்!!

350

facebook

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் தற்போது பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள்.

ஆடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடி வந்த காட்சி உலக மக்கள் அனைவரின் மனதையும் பதைபதைக்கச் செய்தது.

இந்நிலையில், நோர்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து அவரது பதிவு நீக்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த பதிவினை மீண்டும் மீள்பதிவு செய்த பேஸ்பக் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.