புகையிரதத்திற்கு கல்லெறிந்த சிறுவன் கைது!!

697

train

மருதானை- கறுப்பு பாலத்திற்கு அருகில் புகையிரத்திற்கு கல்லெறிந்த சிறுவன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி சென்ற புகையிரதத்தின் மீதே சிறுவன் கல்லெறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதலினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.