வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
9ம் நாளான இன்று திங்கட்கிழமை (12.09) காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று 10.30 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மப் பெருமான் தேரில் வலம் வந்தார்.
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பெருமளவிலான இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
மேற்படி தேர்த்திருவிழாவின் காவடியாட்டம் கோலாட்டம் என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து 10ம் நாளான நாளை (13.09) செவ்வாய்கிழமை தீர்த்தோற்சவமும்1008 சங்காபிசேகமும் இடம்பெறவுள்ளது.
படங்கள்:சுகுமார்,கஜன்
வீடியோ:கஜன்




































