நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நெல்லை ரத்னா தியட்டரில் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பட தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:–
இந்த படத்தில் நடிகர் சத்யராஜூடன் இணைந்து நடித்துள்ளேன். முழுக்க முழுக்க பொழுதுபோக்கும், நகைச்சுவையும் நிறைந்த படம். 90 சதவீதம் காமெடி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த பாடலை யூ டியூப் மூலம் 30 லட்சம் பேர் கேட்டுள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று டிரெய்லர் வெளியிட்டு வருகிறோம் என்று கூறினார்.