ஆல் இன் ஆல் அழகுராஜாவில் இளம்வயது பிரபுவாக நடிக்கும் கார்த்தி!!

589

pirabu

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இப்படத்தில் கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். காமெடி கலந்த சென்டிமெண்ட் கதையாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கார்த்தி, பிரபுவுக்கு மகனாக நடிக்கிறார். பிரபுவுக்கு இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறது. இதில் இளைய வயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க எண்ணினர். ஆனால், தற்போது இளம்வயது பிரவுவாக கார்த்தி நடிக்கவிருக்கிறாராம்.

பொதுவாக நடிகர்களின் பிளாஷ்பேக் காட்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர்தான் நடிப்பார். ஆனால், வித்தியாசமான முயற்சியாக இதில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.