வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணெய் காப்பு!(படங்கள்)

648

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிசேகம் 26  வருடங்களின் பின்னர் 15.09.2016 வியாழக்கிழமை  இடம்பெறுகின்றது .

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

கோவில் பற்றிய அறிமுகம் 

கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாட்டில்  நிலவிய அசாதாரண நிலைமை  மற்றும் தொடர்ச்சியான  இராணுவ நடவடிக்கைகள்  இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கப்பால் ஆலய நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிசேகம் இடம்பெறுகிறது .

A9  வீதியால் பிரயாணம் செய்யும் அனைவரது காதுகளிலும் கேட்டுபழகிய  திருப்பணி நிதி சேகரிக்கும் புளியங்குளத்தை சேர்ந்த  இராமநாதனின் இந்த  வார்த்தைகள்  அந்த ஆலயத்தை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டுவரும் .

வலக்கை வளமில்லாவிட்டால் எட்டி இடக்கையாலும் போடலாம்.!

சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை  தாளாகவும் ஏற்றுகொள்ளப்படும்!

இந்த வார்த்தைகள் தான் புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தை உங்கள்  நினைவுக்கு கொண்டுவரும்.

இந்த முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் மட்டுமன்றி  இலங்கை மற்றும்  வெளிநாடுகளிலிருந்தும்  வடபகுதி  நோக்கி பயணம் செய்யும் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் வெள்ளையர்கள் என  வேறுபாடின்றி அனைவரது  பூரண ஒத்துழைப்புடனும்  வாகன சாரதிகளின் தாராளமான பங்களிப்புடனும்  ஆலயத்துக்குரிய  திருப்பணி நிதியை இரவு பகல் பாராது தொடர்ச்சியாக தொண்டர்கள் ஒவ்வொரு பேருந்துகள் மற்றும் கண்டி வீதி வழியாக பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும்  மறித்து  முத்துமாரி அம்பாளது  விபூதி பிரசாதம்  முதலியவற்றை வழங்கி பயணிகள்  சாரதிகளிடம் திருப்பணி நிதியினை சேகரித்து இன்று அனைவரது பங்களிப்புடன்  மிக அழகானதொரு ஆலயமாக  வடிவமைக்கபட்டுள்ளது உண்மையிலே பாராட்டுதலுக்குரியது .

இலங்கையின்  வரலாற்றில் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடியாக  அனைத்து   இன மத பேதமின்று அனைவரின்   பங்களிப்புடன் அமைக்கபட்ட ஒரேயொரு கோவிலாக  வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள  முத்துமாரியம்மன் திருக்கோவில் விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.

தமிழ் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞர்களால் மிக அழகாக  அமைக்கபட்டுள்ள இந்த  ஆலயத்தை   இனிவரும் காலங்களில்  அனைவரும் தரிசித்து செல்லமுடியும்.

மேற்படி ஆலயத்தின்  மகா கும்பாபிசேகம்  சிவஸ்ரீ .நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது.

நிகழ்வுகளுடன்  கஜன் 

111111

14291633_1291379850913322_4080495883061609449_n 14317592_1291379384246702_7182968620418336525_n 14322577_1291380704246570_6566681015161908968_n 14322776_1291383064246334_6309166070080789931_n 14328942_1304273709592579_946443366_n 14329065_1304275779592372_877247474_n 14330976_1304273522925931_108644866_n 14330978_1304273072925976_155477236_n 14331541_1304276259592324_229562270_n 14331608_1304272969592653_838353440_n 14341417_1304276039592346_1240998049_n 14341417_1304276189592331_53526479_n 14341427_1304273132925970_700367920_n 14341538_1304276122925671_252572398_n 14341674_1304278549592095_405303590_n 14341815_1304275816259035_1176838815_n 14344099_1291382560913051_7684847607704750589_n 14344336_1291381880913119_8658372147394694564_n 14348691_1304273662925917_102655481_n 14348872_1304273179592632_1279205983_n 14349008_1304273032925980_833855734_n 14349103_1304276092925674_1701767022_n 14355061_1291381014246539_8105082114592001803_n 14355182_1291381374246503_8135793482923812223_n 14355844_1304273606259256_383654912_n 14355924_1304273269592623_1651616942_n 14356047_1304273309592619_2126599587_n 14356091_1304276246258992_1099903541_n 14371768_1304273362925947_2035261635_n 14371922_1304276286258988_1782248568_n 14371990_1304273812925902_262872236_n