நுகேகொடையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து தற்போது நலன்புரி நிலையமொன்றில் பணியாறும் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை பாலியல் துஷ்பிர யோகம் செய்த பின்னர் தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கைது செய்யும் நோக்கில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுகேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த குறித்த பெண் மீது போலியாக காதல் கொண்டதோடு அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் நபரொருவர் உறுதியளித்துள்ளார்.
உறவினர்கள் யாருமில்லாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த தன்மீது அக்கறை செலுத்த ஒருவர் கிடைத்து விட்டதாக எண்ணி இப்பெண்ணும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு ஆலயம் ஒன்றுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் பின்னர் சந்தேக நபரான காதலன் அருகிலுள்ள விடுதியொன்றுக்கு சென்று சற்று இளைப்பாறி விட்டுவருவோம் என அப்பெண் அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த பெண் உறக்கத்திலிருந்த நேரம் பார்த்து சந்தேக நபர் விடுதியில் இருந்த தப்பிச்சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
செய்வதறியாத பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






