ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

896

abuse

நுகே­கொ­டை­யி­லுள்ள ஆத­ர­வற்றோர் இல்­லத்தில் வளர்ந்து தற்­போது நலன்புரி நிலையமொன்றில் பணி­யாறும் பெண் ஒரு­வரை திரு­மணம் செய்து கொள்வ­தாக ஏமாற்றி அவரை பாலியல் துஷ்பிர­ யோகம் செய்த பின்னர் தப்பிச் சென்ற சந்­தேக நபர் ஒரு­வரை கைது செய்யும் நோக்கில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக நுகேகொடை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சிறு வய­தி­லேயே பெற்­றோரை இழந்த குறித்த பெண் மீது போலி­யாக காதல் கொண்டதோடு அவரை திரு­மணம் செய்து கொள்­வ­தா­கவும் நப­ரொ­ருவர் உறுதியளித்­துள்ளார்.

உற­வி­னர்கள் யாரு­மில்­லாமல் ஆத­ர­வற்றோர் இல்­லத்தில் வளர்ந்த தன்­மீது அக்­கறை செலுத்த ஒருவர் கிடைத்து விட்­ட­தாக எண்ணி இப்­பெண்ணும் திரு­ம­ணத்­துக்கு சம்மதம் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் அப்­பெண்ணை அழைத்துக் கொண்டு ஆலயம் ஒன்றுக்குச் சென்று பூஜை வழி­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளார் பின்னர் சந்­தேக நப­ரான காதலன் அரு­கி­லுள்ள விடு­தி­யொன்­றுக்கு சென்று சற்று இளைப்­பாறி விட்­டு­வ­ருவோம் என அப்பெண் அழைத்து சென்று அவரை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார்.

அதன்­பின்னர் குறித்த பெண் உறக்­கத்­தி­லி­ருந்த நேரம் பார்த்து சந்­தேக நபர் விடுதியில் இருந்த தப்­பிச்­சென்­றுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

செய்­வ­த­றி­யாத பாதிக்­கப்­பட்ட பெண் இச்­சம்­பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.