தோடம்பழத்தை எடுக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து பலி!!

1192

boy

மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தன்னுடைய தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன் என தெரியவந்துள்ளது.

கிணற்றில் விழுந்து கிடந்த தோடம்பழத்தை எடுப்பதற்காகச் சென்ற போதே சிறுவன் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மெதியத்தென்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.