பாணந்துறை கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
12 பேரடங்கிய குழுவொன்று இன்று பிற்பகல் கடலில் குளிக்கச் சென்றிருந்த போதே அவர்களில் 19, 22 மற்றும் 24 வயதுடைய மூவர் காணாமற்போயுள்ளனர்.
இம்மூவரும் பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.






