தெளிவான சூரிய கிரகண புகைப்படங்களை அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம்!!

502

degree panorama of mars

செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரிய கிரகணத்தை கியூரியாசிட்டி விண்கலம் தெளிவாக போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாய்கிரகத்தில் உயரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அது அங்கு செவ்வாய்கிரகத்தின் புவிஅமைப்பு சுற்றுப்புற சூழல் போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில், கியூரியாசிட்டியில் உள்ள சக்தி வாய்ந்த டெலிபோட்டோகிராபி கமரா சூரிய கிரகணத்தை தெள்ளத் தெளிவாக போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.



மேலும், செவ்வாய்கிரகத்தின் 2 சந்திரன்கள் மற்றும் நட்சத்திரங்கள் சூரியனை கடந்து செல்வது போன்றும் உள்ளது. இதுபோன்ற போட்டோக்கள் இதுவரை எடுக்கப்பட்டதில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே செவ்வாய்கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம் முதன் முறையாக தானாக இயங்கியுள்ளது. அதற்கான தொழில்நுட்பத்தை கியூரியாசிட்டியின் என்ஜினீயர்கள் வழங்கியுள்ளனர்.