இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள்!!

459

ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார்.

11
ரி 38 – 400மீற்றரில்

மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 00.71 செக்கன்களில் நிறைவு செய்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

12
கதீனா கொக்ஸ்

ரியோ ஒலிம்பிக் வெலோட்ரோமில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சி 4 – 5 பிரிவு பெண்களுக்கான 500 மீற்றர் நேரக் கணிப்பு சைக்கிளோட்டப் போட்டி யிலும் கதீனா கொக்ஸ் உலக சாதனையுடன் (34.598 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அத்துடன் ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ரீ 38 பிரிவு பெண்களு க்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் (13.01 செக்.) இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.