குழந்தைகளின் முன்னால் பெற்றோர் செய்யக்கூடாதவை!!

457

Sad looking girl with her fighting parents behind her; Shutterstock ID 90897806; PO: The Huffington Post; Job: The Huffington Post; Client: The Huffington Post; Other: The Huffington Post

 

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி மாதிரி. அவர்கள் செய்வதை தான் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பார்கள். தாய், தந்தை மற்றும் குடும்ப சூழலை பொருத்தே குழந்தைகளின் எதிர்காலமும், மன பக்குவமும் அமைகிறது.

நிச்சயம் குழந்தைகள் முன்னர் பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள் :

குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகள் முன்னிலையில் யாரையும் தவறாக பேசக் கூடாது. இது அவர்கள் மேல் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை உருவாக்குவதுடன், அவர்கள் எதிரிலேயே பெற்றோர்கள் அந்த நபரை பற்றி சொன்ன வார்த்தைகளை குழந்தைகள் சொல்லி விடுவார்கள்.

மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது. இதெல்லாம் பின்னர் அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை பெற்றோர்கள் மறக்க கூடாது.

உன் பிரண்டு எவ்ளோ மார்க் எடுத்துருக்கான் பாரு நீயும் இருக்கியே போன்று நம் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மட்டமாக பேசக் கூடாது. இது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மனதில் ஏற்படுத்திவிடும்.

குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலோ, தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலோ அவர்களை திட்டாமல் அவர்கள் பிரச்சனை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.