வானத்திலிருந்து வந்த 2 கிலோ எடையுள்ள மீன் முகத்தில் மோதியதால் யுவதி அதிர்ச்சி!!

608

fish-on-head

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், வானத்­தி­லி­ருந்து வந்த 2 கிலோ­கிராம் எடை­யுள்ள மீன் ஒன்று தனது முகத்தில் வீழ்ந்­ததால் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

பென்­சில்­வே­னியா மாநி­லத்தின் பில­டெல்­பியா நகரைச் சேர்ந்த லிசா லொப்றீ எனும் இந்த யுவ­திக்கே இந்த விசித்­திர அனு­பவம் ஏற்­பட்­டுள்­ளது. பூங்கா ஒன்றில் தான் நடந்து கொண்­டி­ருந்­த­போது, கெட்பிஷ் ரகத்தைச் சேர்ந்த சுமார் 5 இறாத்தல் (2.2 கிலோ­கிராம்) எடை­யுள்ள மீனொன்று திடீ­ரென தனது முகத்தில் வந்து விழுந்­த­தாக லிசா தெரி­வித்­துள்ளார்.

“இந்த சம்­பவம் எவ்­வாறு நடந்­தது எனத் தெரி­ய­வி­ல்லை. இச்­ சம்­பவம் எனக்குப் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது” என அவர் கூறி­யுள்ளார்.

காற்­றினால் அள்­ளு ண்டு செல்­லப்­பட்ட சிறிய அள­வி­லான மீன் கள் மழை­யுடன் வானத்­தி­லி­ருந்து வீழ்ந்த சம்­ப­வங்கள் இலங்­கை­யிலும் இடம்­பெற்­றுள்­ளன.

ஆனால், சுமார் 5 கிலோ எடை­யுள்ள இந்த மீன் பற­வை­யொன்­றினால் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.