அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தன்னுடைய பணியாளர்கள் குறித்து ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
இதனையடுத்து தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
அதாவது அமெரிக்க உளவு அமைப்பு, இராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் என பலர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக சிஐஏவில் பணியாற்றும் ஐந்தில் ஒருவருக்கு தீவிரவாத அமைப்புகள், பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.