நடிகர் எஸ்.வி.சேகர் தனது நாடகத்தினை கிண்டலடித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை எஸ்.வி.சேகர் தனது மகன் அஸ்வின் சேகருடன் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், மகாபாரத்தில் மங்கத்தா என்ற என்னுடைய நாடகம் 1980ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை மாநகரம் முழுவதும் எனது போட்டோவுடன் தரைக் குறைவாக விமர்சித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இது என்னை மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவுடன் மகாபாரத்தில் மங்காத்தா சி.டி.களையும் தன்னை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் அடங்கிய சி.டி.க்களையும் அவர் வழங்கியுள்ளார்.